குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில்

kumaragiri

குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் சேலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் அம்மாபேட்டை அருகே எருமபாளையம் பகுதியில் உள்ள குமரகிரி மலையில் அமைந்துள்ளது.

இக்கோவில் செங்குந்த கைக்கோளர் வகுப்பைச் சார்ந்த சன்னியாசி கருப்பண்ணசுவாமி முதலியார் என்பவரால் கட்டப்பட்டது.

இங்குள்ள மூலவர் பால தண்டாயுதபாணி வடக்கு நோக்கி (குபேர திசை) அருள்பாலிக்கிறார். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

விநாயகர், துர்க்கை அம்மன், நவகிரகங்கள் மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கான சன்னதிகளும் உள்ளன.

சுமார் 500 அடி உயரமான சிறிய மலை உச்சியில் உள்ள இக்கோவிலுக்குச் செல்ல 700 படிகள் உள்ளன.

நீண்ட காலத் திருப்பணிகளுக்குப் பிறகு, மார்ச் 25, 2026 அன்று இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மாம்பழம் கிடைக்காத கோபத்தில் வந்த முருகன் இங்கு தங்கியதாக ஐதீகம். எனவே இவருக்கு 'மாம்பழ முருகன்' என்ற பெயரும் உண்டு; இங்கு மாம்பழம் படைத்து திருமணத் தடை நீங்க வழிபடப்படுகிறது.

திருவிழாக்கள்
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி மற்றும் சித்ரா பவுர்ணமி விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழா மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகிறது.

kumaragiri

திறந்திருக்கும் நேரங்கள்
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

அமைவிடம்
இக்கோவில் சேலம் மாநகரிலிருந்து அம்மாபேட்டை வழியாக உத்தமசோழபுரம்/உடையாப்பட்டி புறவழிச்சாலையில் (Udayapatti Bye pass Road), எருமபாளையம் பகுதியில் அமைந்துள்ளது.சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து (Old Bus Stand) அம்மாபேட்டை, உடையாப்பட்டி அல்லது எருமபாளையம் செல்லும் நகரப் பேருந்துகள் (Town Buses) மூலம் எளிதில் அடையலாம். காரிலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ செல்பவர்கள், சென்னை - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பைபாஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள கோவில் அடிவாரத்தை அடையலாம்.

குறிப்பு
மலைக்குச் செல்லும் சாலை சற்று கரடுமுரடாக இருப்பதால், அடிவாரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வது நல்லது.

கோவிலுக்கு செல்லும் மலைப் பாதை முழுதும் குரங்குகள் அதிகம் இருப்பதால் பக்தர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

முகவரி
அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில்,
குமரகிரி மலை, எருமபாளையம்,
அம்மாப்பேட்டை,
சேலம் - 636015.
பேசி: 0427 - 2242789,240064, 9942271859