|
தினசரி தியானம் |
முறை மாற்றம் போகத்தை நாடுகிற நாட்டம் யோகத்தை நாடுகிற நாட்டமாக என்னிடத்து மாறியமையும்படி ஈசா, அருள்புரிவாயாக. நீர்வீழ்ச்சி என்னும் ஆகர்ஷண சக்தியை மின்சக்தியாக மாந்தர் மாற்றியமைக்கின்றனர். போராட்டத்தை மனிதன் அமைதியாக மாற்றவேந்தும். காமத்தை கடவுள் பக்தியாக்க வேந்தும். வெறுப்பை அருள் கலந்த இரக்கமாக மாற்றிவிட வேண்டும். அப்பொழுது மனிதன் சான்றோனாக மாரி விடுகிறான். விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன் கிட்டேன் அவருரை கேட்டும் இரேன்மெய் கெடாதநிலை தொட்டேன் சுகதுக்க மற்றுவிட்டேன் தொல்லை நான்மறைக்கும் எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்திங் கெய்தியதே. -பட்டினத்தார் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |
|