27 நட்சத்திரக் கோயில்கள் அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவரவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோயிலுக்குச் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலனைத் தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயில் வழிபாடும் மிகவும் அவசியமாகும். 27 நட்சத்திரங்களுக்கும் உரிய லிங்கங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் இரண்டு உள்ளன. அங்கும் சென்று அவரவருடைய நட்சத்திர லிங்கத்திற்கு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும். 27 நட்சத்திரங்களுக்குரிய லிங்கங்கள் உடைய முதலாவது கோவில் திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் எனப்படும் ஆதிபுரீஸ்வரர் அல்லது படம்பக்க நாதர் சிவன் கோயில். இரண்டாவது கோயில் திருவிடைமருதூரில் உள்ள சிவன் கோயில்.
|
27 நட்சத்திரக் கோயில்கள் மொழி: தமிழ் பதிப்பு: 16 ஆண்டு: ஜூலை 2018 பக்கங்கள்: 232 எடை: 300 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-81-8476-132-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 205.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது! அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுடன் இணைந்து, வளர்ந்து வந்துள்ள ஒரு சாஸ்திரமும் கூட. நம்முடன் இணைந்துள்ள ஒரு சாஸ்திரமாக இருப்பதால், ஜோதிடத்தின் மீதான நமது நம்பிக்கை அதிகமாகிறது.நமது சாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே, இவை எங்குமே முரண்படுவதில்லை. அதனாலேயே சாஸ்திரங்கள், தங்களது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் அதற்குள்ளேயே அடக்கிக் கொண்டுள்ளன.பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த 27 நட்சத்திரக் கோயில்கள் புத்தகம் உங்களுக்கு உதவும். உங்களது நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அந்தத் தலத்தின் தல மரம் & அதன் சிறப்பு, அது தொடர்பான தலபுராணக் கதை, அந்தத் தலம் பற்றிய பூகோளத் தகவல், அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய மந்திரம் என்று நட்சத்திரம் தொடர்பான அத்தனை தகவல்களையும் நூலாசிரியர் மயன் இந்தப் புத்தகத்தில் துல்லியமாகக் கொடுத்துள்ளார். ஓவியர் ம.செ. வரைந்துள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள், இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|