|
கொரோனா ஒழிய இறை வணக்கம் கல்லாக மண்ணாக நின்றாய் நீ புல்லாகப் பூவாகப் படர்ந்தாய் நீ சொல்லாகப் பொருளாகச் சிறந்தாய் நீ நன்றாவும் அன்றாவும் நிறைந்தாய் நீ குன்றாடும் மயிலோடு முருகன் நீ மன்றாடும் எருதோடு சிவனும் நீ கன்றோடும் ஆவினுடன் மாலும் நீ இன்றோடு இக்கலிநோய் தீர்ப்பாய் நீ! இத்தனை நாள் இமை சோரார் மருத்துவர்கள் முத்தனைய பணிசெய்தார் செவிலியர்கள் சுத்தம்செய்தெமைக் காத்தார் ஊழியர்கள் நித்தமும் ஒழுங்கமைத்தார் காவலர்கள். ஒளிபரப்பி உன்பேரை நினைந்தோம் யாம் வளிகோரி உன்னடிகள் தொழுதோம் யாம் களிகூடும் புத்தாண்டாய் ஒளிரச் செய் அளிஇந்த வரமெமக்கு அருளாளா. |
|