பல்சுவை இணைய இதழ்
  


தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்காலிகமாக ஒத்திவைப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 05 2022, 20:30 [IST]

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (நவம்பர் 6) நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்தது. ஆனால் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் தவிர தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றி சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பொது மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் பாடல்கள் பாடவோ,‌ தனிப்பட்ட நபர்கள், மதம் ஜாதி குறித்து தவறாக பேசுவோ கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து பேசுவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது.

அதனை தொடர்ந்து இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, முதலுதவி, ஆம்புலன்ஸ், கழிப்பறைகள் ஆகிய வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மேற்கொள்ள வேண்டும்.

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து இரண்டு நாட்களாக சென்னை தாம்பரத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் காரியாலத்தில் இது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணியை ஒத்திவைப்பதாக அந்த அமைப்பு தனது தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நாளை நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்










பஞ்சதந்திரக் கதைகள்
ஆசிரியர்: ப்ரியா பாலு
வகைப்பாடு : குழந்தைகள்
விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 240.00
அஞ்சல்: ரூ. 50.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)