குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து: 35 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 30, 2022, 21:35 [IST] வழக்கம்போல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் சென்ற 35 பேர் பலியானார்கள். சுமார் 100 பேர் பாலத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் தான் இந்த பாலம் புணரமைக்கப்பட்டு, குஜராத் புத்தாண்டையொட்டி, அக்டோபர் 26ம் தேதி பொதுமக்கள் உபயோகத்திற்காக திறக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணமும் அறிவித்திருக்கிறார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|