பல்சுவை இணைய இதழ்
  


ஈரானில் வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 27, 2022, 07:40 [IST]

டெஹ்ரான்: நேற்று 26 அக்டோபர் புதன் கிழமை மாலை ஈரானில் வழிபாட்டு தளம் ஒன்றில் (Shah Cheragh Shrine) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 40வது நாளான நேற்று அந்நாட்டின் இரண்டாவது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஈரான் நீதித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று, ஈரானிய செய்தி இணையதளம் கூறியுள்ளது.

திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடும் பதிலடியை திரும்ப பெறுவார்கள் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்


எழுத்தும் ஆளுமையும்
ஆசிரியர்:
வகைப்பாடு : கட்டுரை
விலை: ரூ. 175.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)