பல்சுவை இணைய இதழ்
  


மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே - பட்னவிஸ் துணை முதல்வர்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூலை 01, 2022, 07:15 [IST]

மும்பை : மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக, சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார்.

உத்தவ் தாக்கரேயின் விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் வசப்படுத்தி, குஜராத், அசாம் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள சொகுசு ஓட்டல்களில் முகாமிட செய்தார். அவர்கள் அங்கிருந்தபடி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் உறவை முறித்து கொண்டு, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனா தலைமையை வலியுறுத்தினர். ஆனால் உத்தவ் தாக்கரே அவர்களின் வற்புறுத்தலுக்கு பணிய மறுத்து விட்டார்.

மேலும் ஓட்டலில் முகாமிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க் களில் 16 பேரை தகுதிநீக்கம் செய்ய துணை சபாநாயகரை சிவசேனா தலைமை கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று துணை சபாநாயகர் அனுப்பிய தகுதிநீக்க நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்ததால், அதிருப்தி எம்.எல்.ஏ.க் களும் அவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க காய்நகர்த்தி வந்த பா.ஜனதாவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு கவர்னர் உத்தரவிட, அதை எதிர்த்து சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. ஆனால் சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது.

சட்டசபையில் பலப்பரீட்சைக்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை என்று கூறிய உத்தவ் தாக்கரே அன்று இரவே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

கோவாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் முகாமிட்டு இருந்த ஏக்நாத் ஷிண்டே நேற்று காலை மும்பை திரும்பினார். அவர் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவர்கள் இருவரும், ராஜ்பவன் சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். அப்போது, தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதை கவர்னர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார்கள் என அனைவராலும் நம்பப்பட்டது.

கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்து இருவரும் பேட்டி அளித்தார்கள். அப்போது, தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே இரவு 7.30 மணி அளவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். நான் ஆட்சியில் பங்கேற்க மாட்டேன். மந்திரி சபை பின்னர் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சைகள் மந்திரி சபையில் இடம்பெறுவார்கள்" என்றார்.

இதற்கிடையே தேவேந்திர பட்னாவிசும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதை ஒப்புக்கொண்ட தேவேந்திர பட்னாவிஸ், தான் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்று தெரிவித்தார்.

திட்டமிட்டப்படி சரியாக 7.30 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே மற்றும் தனது அரசியல் குருநாதர் ஆனந்த் திகே பெயரை கூறி பதவி ஏற்றார்.

இதேபோல தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழா 12 நிமிடங்களில் முடிந்தது. இதன் மூலம் மராட்டியத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு, குழப்பத்துக்கு விடியல் கிடைத்தது.

அடுத்து புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பார். அதன் பின்னர் மந்திரி சபை விஸ்தரிப்பு நடைபெறும்.

பிற செய்திகள்


Why I Killed the Mahatma: Understanding Godse’s Defence
ஆசிரியர்: Dr Koenraad Elst
வகைப்பாடு : Politics
விலை: ரூ. 495.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888ராஜாஜியின் பகவத்கீதை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)