பல்சுவை இணைய இதழ்
  


அமெரிக்காவில் கண்டெய்னரில் அகதிகள் 46 பேர் சடலமாக மீட்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 28, 2022, 11:45 [IST]

வாஷிங்டன்: அமெரிக்காவில் கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமாக கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர், கண்டெய்னர் லாரியிலிருந்து உதவி கேட்டு அழுகுரல் கேட்டதை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்து வந்த போலீஸார் அந்த கண்டெயினரை திறந்து பார்த்தனர். அப்போது அந்த கண்டெய்னரில் 50 க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மருத்துவத்துறையினர் வந்து கண்டெயினரில் உள்ளவர்களைப் பரிசோதித்ததில், அதில் இருந்த 46 பேர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும், லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்துடன் வந்ததும் தெரிய வந்துள்ளது.

போதிய உணவு, குடிநீர் இல்லாததாலும், கடுமையான வெப்பத்தாலும், லாரியில் இருந்தோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. லாரியின் கண்டெய்னர் குளிர்சாதன வசதி கொண்டது என்றாலும், அந்த குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

லாரியை ஆள் அரவமற்ற பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி டிரைவரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிற செய்திகள்


திருக்குறள் - மூலமும் கருத்துரையும்
ஆசிரியர்: புலவர் நன்னன்
வகைப்பாடு : இலக்கியம்
விலை: ரூ. 55.00
தள்ளுபடி விலை: ரூ. 50.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)