தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 10, 2021, 08:00 [IST] நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கி்றார். மேலும் ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார். உத்தராகண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி மெளரியா சமீபத்தில் தமது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடதக்கது. அசாம் மாநில ஆளுநராக உள்ள ஜக்தீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் தமது உத்தரவில் கூறியுள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|