பல்சுவை இணைய இதழ்
  


ஓவல் டெஸ்டில் 50 ஆண்டுக்குப் பிறகு இந்தியா வெற்றி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 07, 2021, 07:20 [IST]

ஓவல், இங்கிலாந்து: பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும் முதல் டெஸ்ட்வெற்றி இது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அசைக்க முடியாத வெற்றியை பதிவு செய்துள்ளது.

டாசை இழந்தது, முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களை எடுத்தது, இந்தியா. ஆனால் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன் எடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு 99 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இந்தியா மீண்டும் முன்னிலைக்கு வந்தது. ரோஹித் சர்மா 127 ரன்கள் அடிக்க அவருக்கு ஆதரவாக புஜாரா 61 ரன்களும் விராட் கோலி 44 ரன்களும் எடுத்ததால் தொடக்கத்திலேயே வலுவாக முன்னேறியது இந்தியா. ரிஷப் பந்த், ஷ்ரத்துல் தாக்குர் என அடுத்த வரிசை வீரர்களும் அரைச் சதங்களை அடித்ததால் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பெர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் தங்களது விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்து அசத்தினர். ஆனால் பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை.

டேவிட் மாலன் 5 ரன்களுக்கும், ஒல்லி போப் 2 ரன்களுக்கு அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் பலமாக இருந்த பேர்ஸ்டோ, மொயின் அலி இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். கடைசியாக அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த கேப்டன் ஜோ ரூட் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த வோக்ஸ், ஓவர்டன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷ்ரத்துல் தாக்குர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்தப் போட்டியில் தனது நூறாவது விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டி வரும் வெள்ளிக்கிழமை அன்று ஓல்டு டிராவோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டதை சமன் செய்தாலோ தொடரை இந்தியா கைப்பற்றும்.

1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

பிற செய்திகள்


பதிமூனாவது மையவாடி
ஆசிரியர்: சோ. தர்மன்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 320.00
தள்ளுபடி விலை: ரூ. 310.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

உள்ளுணர்வின் கருமையம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)