தமிழகத்தில் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 25, 2021, 20:35 [IST] தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் தாக்கம் குறைய குறைய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே 24ந்தேதியில் இருந்து 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 28ந்தேதி முடிகிறது. இந்த நிலையில் 6வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் இன்று தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். - தேநீர் கடைகள் (எடுத்துச்செல்ல மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி உண்டு. - ஹார்ட்வேர், புத்தக கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 வரை இயங்க அனுமதி. - பாத்திர கடைகள், ஃபான்சி பொருட்களுக்கான கடைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி - அரசின் அத்தியாவசிய துறைகள் 100%, மற்ற துறைகள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி - தனியார் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம் - இதர தொழிற்சாலைகள் 33%, ஐ.டி. நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்படலாம் - கட்டுமான நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் செயல்படலாம் - அழகு நிலையங்கள், குளிர்சாதன வசதியின்று 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் - பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - இனிப்பு, கார வகைகளை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம் - திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி பெற்று வாரம் ஒரு நாள் பராபரிப்பி பணிகள் செய்யலாம் வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கான தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்: - பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. - உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% திரனில் இயங்கலாம். - சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். - செல்பெசி மற்றும் அது சார்ந்த கடைகள் காலை 9 முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். - கட்டுமானப் பணிகளை 50% ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம். வகை 3-ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்: - அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கலாம். - தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% ஊழியர்களுடன் செயல்படலாம். - ஜவுளிக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி காலை 9 மனி முதல் மாலை 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். - மத வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி - வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி. - வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம். - தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. - உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% நபர்களுடன் இயங்கலாம்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|