சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 14, 2021, 10:00 [IST] சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னை ரெயில்வே கோட்டமும், மின்சார ரெயில் சேவையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அதேபோல், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரெயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் 20-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|