பல்சுவை இணைய இதழ்
  


டெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 26, 2021, 19:40 [IST]

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

செங்கோட்டையை சுற்றியுள்ள போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் செங்கோட்டையை சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம், நாடளுமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

பிற செய்திகள்


கடலுக்கு அப்பால்
ஆசிரியர்: ப. சிங்காரம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)