டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 14, 2021, 07:55 [IST] அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக, கடந்த 6ம் தேதி நாடாளுமன்றம் கூடிய போது, அங்கு புகுந்த டிரம்பின் ஆதரவாளர்கள், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வன்முறையில் ஈடுபட்டனர். இந்த தீர்மானத்தின் மீது நீண்ட விவாதம் நடைபெற்ற நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், 232 எம்.பி.க்கள் பதவிநீக்கத்தை ஆதரித்து வாக்களித்தனர். டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பேரும் அவருக்கு எதிராக வாக்களித்தனர். மசோதாவை எதிர்த்து 197 பேர் வாக்களித்துள்ளனர். தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடைபெறுகிறது. அங்கு டிரம்ப் மீதான குற்றத்தை உறுதி செய்ய, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. இதனால் செனட் சபையில் குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தால், அவர் முழுமையாக பதவிநீக்கம் செய்யப்படுவார். அமெரிக்க அதிபர் வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் முதல் அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்.
|
சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2006 பக்கங்கள்: 136 எடை: 150 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-81-8368-200-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது. போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம். இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|