தமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 12, 2021, 11:35 [IST] கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என அனைத்து பள்ளியைச் சார்ந்த 95 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருந்தனர். பெற்றோர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறக்க பெற்றோர் இசைவு தெரிவித்ததாக 95% பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். * பெற்றோரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வரும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. * ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட அனுமதி. * பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. * மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின், துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. * கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில்கொண்டே பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|