ஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 02, 2021, 07:55 [IST] பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளன. கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பு மருந்தை, நம் நாட்டில் பரிசோதித்து, தயாரிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்த, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு, தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்க, பரிந்துரைத்தது. இதுகுறித்து, மருந்துகள் ஒழுங்குமுறை விவகாரப் பிரிவின் கூடுதல் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங், நேற்று கூறுகையில், “கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, பாதுகாப்பானதாக உள்ளது. எனவே, கொரோனா வைரசை தடுக்க, மக்களுக்கு அதை அளிக்கலாம்,” என்றார். இவ்விஷயத்தில், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் இறுதி முடிவு எடுத்து, அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அனுமதி இருந்தால்தான் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். மேலும், சீரம் நிறுவனத்திடம் தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பிற வெளிநாடுகளுக்கும் அதை விநியோகிக்க சட்ட அனுமதி கிடைக்கும். இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் இறுதி அனுமதி ஓரிரு தினங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் (கோவேக்சின் தடுப்பூசி), சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி), ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (எம்ஆர்என்ஏ தடுப்பூசி) ஆகிய 3 நிறுவனங்களும் அவசர கால பயன்பாட்டு அனுமதியை கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு இந்த மாத தொடக்கத்தில் விண்ணப்பித்திருந்தன.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|