ரேஷன் அட்டைக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு: தமிழக முதல்வர் அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 19, 2020, 18:20 [IST] இது குறித்து அவர் கூறும் போது, “ பொங்கல் பண்டிகை வருவதை யொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும். இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து தொடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படும்”என்றார். கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய், துண்டு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகை 2500 ஆகவும், முழு கரும்பாகவும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|