மதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 14, 2020, 08:40 [IST] ஜவுளிக்கடை செயல்பட்ட கட்டிடம் மிகவும் பழமையானது. தீ விபத்தின் காரணமாக திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 4 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி(30), சிவராஜன்(36) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் கல்யாண குமார்(30), சின்னகருப்பு(30) ஆகியோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கட்டிடம் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|