தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 1, 2020, 17:15 [IST] திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். நேற்றைய தினம் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 13 செமீ மழையும் திண்டுக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|