மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்புகு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 24, 2020, 21:50 [IST] கொரோனா தொற்று நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மணடலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 80% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டத்திலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|