திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 10, 2020, 10:20 [IST] கொரோனா தொற்று காரணமாக ஜூன் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 10 புதன் கிழமை) காலை 8.05 மணிக்கு உயிரிழந்தார். இன்று ஜெ.அன்பழகனின் பிறந்தநாளும் கூட. ஜெ. அன்பழகன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் தென் சென்னை மாவட்டத் தலைவராக பணியாற்றியவர். சென்னை திமுகவின் தூண்களில் ஒருவராக விளங்கியவர். 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர். ஜெ.அன்பழகனை பொறுத்தவரை மனதில் பட்டதை எதற்காகவும், யாருக்காகவும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் வழக்கம் உடையவர். தொண்டனுக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதல் ஆளாக முன்னுக்கு நிற்பார். அன்பழகன் கவலைக்கிடமாக உள்ள செய்தி அறிந்து காலையிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அன்பழகன் உயிர்பிரியும் நேரம் அவர் மருத்துவமனையில்தான் இருந்தார். அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்டாலின் வீடு திரும்பினார். கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடலை அடக்கம் செய்யவுள்ளனர். கண்ணம்மாபேட்டை சுடுக்காட்டில் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|