அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 1, 2020, 08:40 [IST] வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. அம்பன் என பெயரிடப்பட்ட இந்த புயலானது மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மெதினாபூர் மாவட்டம் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளின் சுந்தர்பன் இடையே கடந்த 20ஆம் தேதி கரையை கடந்தது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஜூன் 2ஆம் தேதி (நாளை மறுநாள்) புயலாக வலுவடையக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஜூன் 5ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அரபிக்கடல் பகுதியில் உருவாகும் இந்த புயலால் இந்தியாவுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், பருவமழையை தாமதப்படுத்துவதற்கு இது காரணமாக அமையும் என கூறப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால், நடப்பாண்டு ஜூன் 5ஆம் தேதியன்று தாமதமாக தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|