உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 30, 2020, 08:35 [IST] உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை போல் செயல்படுகிறது. எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என கூறி இருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்ப கட்டத்தில் போதுமானதைச் செய்யத் தவறிவிட்டது. நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம். கொரோனா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து உலகிற்கு பதில்கள் தேவை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கூறினார். அமெரிக்கா விலகியதால் உலக சுகாதார அமைப்பிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|