சென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 26, 2020, 09:40 [IST] நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையத்திற்கு செல்வோர் ஆட்டோ, டாக்சி இயக்கப்படாததால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில்தான், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோக்கள், டாக்சிகள், சைக்கிள் ரிக்ஷாக்களுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகு இதுவரை ஆட்டோ, டாக்சி இயங்காமல் இருந்த நிலையில் முதல் முறையாக, இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|