மும்பை: சரக்கு ரயில் மோதி 17 வெளிமாநில தொழிலாளர்கள் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 08, 2020, 09:50 [IST] தற்போது தான் பிற மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. மேலும் ஏற்கனவே உணவிற்கே பணமின்றி கஷ்டப்படும் தொழிலாளர்களிடம் மத்திய அரசு இரக்கமின்றி ரயில் பயணத்திற்கு கட்டணமும் வசூல் செய்கிறது. இதனால் கையில் பணமில்லாத வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றன. இவர்களில் பலர் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சாலை வழியாகவும் ரயில்வே தண்டவாளங்களின் வழியாகவும் நடந்தே செல்கின்றன. அப்போது இவர்கள், சாலையிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் உறங்குவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் மகாராஷ்டிராவில் ஜல்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி உள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் எல்லோரும் ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதியை நோக்கி நடந்து சென்று அங்கிருந்து போபாலுக்கு ரயில் ஏற எண்ணியிருந்தனர். 45 கிமீ நடந்தவர்கள் இடையில் ஓய்வு எடுக்க அந்த தண்டவாளத்தில் படுத்துள்ளனர். கர்மாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் அந்த பக்கம் வராது என்று நினைத்துக் கொண்டு தண்டவாளத்தில் படுத்து தூங்கி இருக்கிறார்கள். ஆனால் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்து, அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்தில் 17 பேர் பலியானார்கள். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|