ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூல் : மத்திய அரசு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 18, 2020, 10:05 [IST] தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி என்றும், இதர வாகனங்களை இயக்க தடை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சில பகுதிகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் வரும் 20ம் தேதி (திங்கள்) முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|