பல்சுவை இணைய இதழ்
  


தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 06, 2020, 11:00 [IST]

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் 485 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேலும் 86 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்து இருக்கிறது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது :

வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்கள்: 90,824 பேர்
அரசின் தனிமை முகாம்களில் இருப்பவர்கள்: 127 பேர்
கண்காணிப்பு முடிந்து திரும்பியவர்கள்: 10,814 பேர்
இதுவரை 4,612 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று, 86 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 85 பேர் டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மற்றொருவர் துபாய் சென்று வந்தவர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.
தனி வார்டில் - 1848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில், தமிழகம் 2வது நிலையில் தான் உள்ளது.
நிலைமை மோசமான பின்னர் சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர்.
28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம்.
2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என முடிவு வந்த பிறகே, வீட்டிற்கு அனுப்புவோம்.
டில்லி சென்று வந்த 1,246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது கட்டத்தில் தான் உள்ளது.
சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் 30 லட்சம் பேர் உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 95 பேரும், கோயம்புத்தூரில் 58 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று, தேனி மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது தற்போது கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர்.

சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (ஏப். 5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்


The Miracle of Positive Thinking
ஆசிரியர்கள்: Arnold Fox & Barry Fox
வகைப்பாடு : Self Improvement
விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)