தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2020, 20:25 [IST] தமிழ்நாட்டை பொறுத்தவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்று, இரண்டாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் 17 பேர் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் மேலும் 110 தமிழர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு கரோனா அறிகுறி இருக்கிறது. பலருக்கு உறுதியும் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்ற 1,500 தமிழர்களில் 616 பேரின் இருக்குமிடம் தெரியவில்லை. தற்போது இரவு, பகலாக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|