தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 11, 2020, 19:30 [IST] ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் கருப்பு முருகானந்தம், எஸ்.வி.சேகர் என தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகனை நியமித்து, அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். நாமக்கல்லை சேர்ந்த முருகன், சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலையில், இளநிலை சட்டப்படிப்பும், சென்னை பல்கலையில், முதுகலை சட்டப்படிப்பும் படித்துள்ளார். 15 வருட வழக்கறிஞர் அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|