ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 09, 2020, 09:00 [IST] இந்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் 11 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும் அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
|
தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2016 பக்கங்கள்: 382 எடை: 400 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-81-84766-94-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 415.00 தள்ளுபடி விலை: ரூ. 375.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட வேறு எந்தக் கோபுரமும் உயரமாக இருக்கக் கூடாது என்று ஓர் எழுதப்படாத சட்டமே இருந்தது. மனக்கவலை, குழப்பம் இருந்தால் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தால் கவலை எல்லாம் அகன்று, மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அதனால்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும், ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றும் சொல்லிவைத்துள்ளனர் நம் முன்னோர். அப்படிப்பட்ட பாரம்பர்யம் கொண்ட கோயில்களின் தனிச் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். மகரிஷிகள் வழிபட்ட திருத்தலங்கள், மகான்களின் திருவடிகள் பதிந்த ஆலயங்கள், மன்னர்கள் எழுப்பி பாதுகாத்த கோயில்கள் என ஒவ்வொரு கோயிலின் வரலாற்றையும், அந்தக் கோயிலில் எழுந்தருளிய இறைவனின் புராணத்தையும் விளக்குகிறார் நூலாசிரியர். இறைவனை வழிபடும் கோயில்களின் புனித வரலாறு நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்யக் கோயில்களைப் பற்றி நாமும் நம் சந்ததியினரும் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும். ஓர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பெற, அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|