கிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 10, 2020, 07:00 [IST] செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே அகரம் என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் 29ம் தேதியிலிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்73-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் சுற்றுவட்டார கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடி வந்தன. அப்பொழுது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். எதிரணியைச் சேர்ந்த கமலேஷ் என்ற 11-ம் வகுப்பு மாணவன் பந்து வீசியுள்ளார். பந்து சுனில் மார்பின்மீது வேகமாக பட்டுள்ளது. சுனில் உடனடியாக மார்பை பிடித்துக் கொண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுனில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
1984 மொழிபெயர்ப்பாளர்: க.நா. சுப்ரமண்யம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: பிப்ரவரி 2020 பக்கங்கள்: 208 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-82648-58-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 240.00 தள்ளுபடி விலை: ரூ. 220.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார். - க.நா.சு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|