முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 04, 2020, 10:55 [IST] கடந்த 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்துள்ளார். 1999ஆம் ஆண்டு நெல்லை மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்வாகியிருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக பதவியில் உள்ளார். பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|