ரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 01, 2020, 13:30 [IST] சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு ரயில் கட்டணங்கள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: சாதாரண ஏசி வசதி இல்லாத பெட்டிகளுக்கான, கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான ஏசி வசதி இல்லாத பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏசி வசதி இல்லாத முதல் வகுப்பு, 2வது வகுப்பு, படுக்கை வசதி பெட்டிகளுக்கு இது பொருந்தும். ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 4 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏசி சேர் கார், 3வது வகுப்பு ஏசி, 2வது வகுப்பு ஏசி, முதல் வகுப்பு ஆகியவை 4 பைசா கட்டண வரம்புக்குள் வரும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் டொரோண்டோ போன்ற பிரீமியம் ரயில்களும், இந்த ரயில் கட்டண உயர்வுக்குள் வருகின்றன. ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களில் மாற்றமில்லை. அதிவிரைவு ரயில்களுக்கான கூடுதல் கட்டண விவரங்களிலும் மாற்றமில்லை. ஏற்கனவே, முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தாது. இவ்வாறு ரயில்வே துறை தனது தகவலில் தெரிவித்துள்ளது. சென்னை முதல் கோவை வரையிலான ஏசி வசதி கொண்ட ரயிலில் பயண கட்டணம் சுமார் ரூ.20 அதிகரிக்கலாம், சென்னையிலிருந்து, நெல்லைக்கான கட்டணம் எனில் ரூ.25 வரை அதிகரிக்க கூடும்.
|
ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-5 மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 144 எடை: 180 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-81-92465-85-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-5 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|