லக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 25, 2019, 11:20 [IST] தமிழகம் முழுவதும் இசைக் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தி புகழ்பெற்ற நிறுவனம் லக்ஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர்கள் லக்ஷ்மன் மற்றும் ராமன் சகோதரர்கள் ஆவர். நேரே தனது வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ராமன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இது அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சகோதரர் லக்ஷ்மன் கூறியுள்ளார். இதனால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|