டிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 2, 2019, 14:40 [IST] தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 3 வருடங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு வந்தது உள்ளாட்சி தேர்தல். இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வேட்புமனுத்தாக்கல் : டிசம்பர் 6ல் துவங்கும் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் : டிசம்பர் 13 வேட்புமனு மீதான மறுபரிசீலனை: டிசம்பர் 16 வேட்புமனுவை திரும்ப பெறுதல் : டிசம்பர் 18 வாக்கு எண்ணிக்கை : 2020 ஜனவரி 2 வார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு : ஜனவரி 6 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல்: ஜனவரி 11 இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும். தற்போது கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு வாக்கு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் இருக்கும். சில ஊர்களில் இதைவிட அதிகமாக வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் குழப்பத்தை தவிர்க்கும் வகையிலும், எளிதான வாக்கு பதிவிற்காகவும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்தில் வாக்குச்சீட்டும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளம் சிவப்பு நிறத்தில் வாக்குசீட்டும் பயன்படுத்தப்படும். ஊராட்சி ஒன்றியவார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்தில் வாக்குசீட்டும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்கு சீட்டும் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|