அரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 1, 2019, 07:40 [IST] தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் நிலைகொண்டிருக்க கூடிய நிலையில் புதிய புயல் சின்னம் உருவாகி இருந்ததாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதற்கு 'மகா' என பெயரிடப்பட்டது. மகா புயல் தீவிர புயலாக மாறியிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். புயல் காரணமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நவம்பர் 4ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும் தெற்கு தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 2 -ம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அங்கு புயலின்பாதிப்பு இருக்குமா?' என்று செய்தியாளர் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாலசந்திரன், “நவம்பர் 2 -ம் தேதியை பொறுத்தவரை புயல் பாதிப்புக்கு வாய்ப்பு இல்லை” என்றார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|