பீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 1, 2019, 11:30 [IST] பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாட்னா நகரின் எஸ்.கே. பூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு இதுவரை பொதுமக்களில் 29 பேர் பலியாகி உள்ளனர் என்று பீகார் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது. வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று வழங்குவதற்காக 2 ஹெலிகாப்டர்களை உதவிக்கு அனுப்பி வைக்கும்படி இந்திய விமான படையிடம் பீகார் அரசு கேட்டு கொண்டுள்ளது. வெள்ள பாதிப்பில், துணை முதல்வர் சுஷில் மோடி தனது குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டார். பாட்னாவில் அவரது வீட்டை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்திருந்தது. இததொடர்பாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், துணை முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டெடுத்தனர். பீகாரின் பக்கத்து மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. இங்கு கனமழை வெள்ளத்திற்கு 87 பேர் பலியாகி உள்ளனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|