சென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 20, 2019, 07:25 [IST] இதற்கு முன்பாக பல்வேறு கடல் பகுதிகளிலும் இதுபோன்ற நீல நிற அலைகள் எழுந்துள்ளன என்றாலும் சென்னைக்கு இந்த அனுபவம் புதிது. இதனால் இப்படியான அலைகள் ஏன் ஏற்படுகின்றன, இதனால் ஆபத்து உண்டா, இயல்பானதுதானா என்பது குறித்து கடல்சார் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடலில் உள்ள சில வகை நச்சுத்தன்மை கொண்ட பாசிகள், தங்களை உண்ண வரும் சிறிய மீன்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உமிழும் ஒளிதான் இப்படி நீல நிறத்தை எதிரொலித்திருக்கும் எனத் தெரிகிறது. இவ்வாறு நீல வண்ணம் வெளிப்படும்போது பெரிய வகை மீன்கள் அப்பகுதிக்கு வந்து, சிறிய மீன்களை பிடித்து சாப்பிட்டுவிடுமாம். இதனால் இந்த பாசிகள், அப்பாடா என்று நிம்மதியடையும். பார்க்க அழகாக இருக்கும், ஆனால் ஆபத்து இவை உருவாக்கும், அதன் வருகை நல்ல செய்தியாக இருக்காது. நொக்டிலுகா என்பது பிளாங்க்டோனிக் உயிரினங்களின் (diatoms) கொடூரமான வேட்டையாடுபவர்களாக அறியப்படுகிறது. இது கடல் உணவு சங்கிலியை சீர்குலைக்க வழிவகுக்கும். இவை அதிக அளவு அம்மோனியாவையும் வெளியேற்றுகின்றன, இதனால் பெரிய அளவில் மீன்கள் செத்து குவியும் வாய்ப்பு உள்ளது. இந்த பாசி திட்டுகள் கடலோர மாசுபாடு மற்றும் கழிவுகள் வெளியேறுவதன் காரணமாக ஏற்படுவது உண்டு. அரபிக் கடல் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு முதல் அடிக்கடி நடக்கிறது. அரபிக் கடல் மேற்பரப்பு நீர் வெப்பமயமாகுவதும், ஊட்டச்சத்து பாய்ச்சல் குறைந்ததும் இதுபோன்ற பாசிகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று அறியப்பட்டுள்ளது. கோவா, மும்பை மற்றும் கேரளாவின் நீர் நிலைகளில் பாசிகள் அதிகம் காணப்படுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாள, சூப்பர் ஹிட் திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில், இதுபோன்ற பாசி பளபளப்பு காட்சி இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|