ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 18, 2019, 05:05 [IST] பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹28 இருந்து ₹32ஆக, அதாவது லிட்டருக்கு ₹4 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ₹35 இருந்து ₹41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தப்படுகிறது. அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ₹6 உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் திங்கள் முதல் அமலுக்கு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் பால் விலை உயர்த்தி உள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இந்த பால் கொள்முதல் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் 4.60 லட்சம் பேர் பயனடைவர் என அவர் கூறினார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|