சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 29, 2019, 18:40 [IST] வீடியோ சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம், ஒப்பந்தப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களை விட கூடுதல் சம்பளம் வழங்கிவந்தது. மேலும் சம்பளப் பிடித்தம் மற்றும் வாகன நிறுத்த கட்டண முறைகேட்டில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டதாக ஊழியர்கள் கேள்வி எழுப்பினர். எனவே ஊதிய உயர்வு கோரியும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வலியுறுத்தியும் மற்றும் முறைகேடுகளை களையக் கோரியும் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஊழியரின் கோரிக்கைக்கு மெட்ரோ நிர்வாகம் செவி சாய்க்காததால் கடந்த அக்டோபர் மாதம் 8 ஊழியர்கள் பணியாளர் சங்கம் ஒன்றை துவக்கினர். இன்று (29-04-2019) மெட்ரோ நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக அந்த எட்டு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது. பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய வளாகத்துக்குள் ஊழியர்களும் வளாகத்திற்கு வெளியே அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ரயில் ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கினர். ஆங்காங்கே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்களை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம். மெட்ரோ ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தங்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மெட்ரோ ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|