ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 29, 2019, 14:15 [IST] வீடியோ பாக்தாத்: கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஈரான் மீது முழுக்க முழுக்க 100% பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. தற்போது ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிடம் இருந்துதான் இந்தியா தற்போது 10% எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. அதேபோல் சீனா, துருக்கி ஆகிய நாடுகளும் ஈரானிடம் இருந்து தங்களின் தேவைக்காக எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் ஈரான் கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இந்த ஒரே வழி மூலம் தான் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 90 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது. இதை ஈரான்- ஓமன் நாடுகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், எப்போதும் ஈரானின் கையே ஓங்கி இருக்கும். அமெரிக்கா தங்களை மீண்டும், சீண்டினால் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி விடுவோம். நாங்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய கூடாது என்றால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எங்களை சீண்ட வேண்டாம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|