திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 21, 2019, 06:50 [IST] நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளை பங்கிடுவது குறித்து, தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்கள், டில்லியில் மூன்று நாட்களாக பேச்சு நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ராகுலுடன், திமுக எம்.பி., கனிமொழி, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, நேற்று முன் தினம் பேச்சு நடத்தினார். இதையடுத்து நேற்று மாலை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் சென்னை வந்தனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் அறிவாலயம் வந்த அவர்கள் ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது. அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் ஸ்டாலின், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் இதை அறிவித்தனர். அதன்படி காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|