அஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 19, 2019, 18:15 [IST] இன்று காலையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பாமக சார்பில், அதன் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் பாமகவிற்கு 7 லோக்சபா தொகுதிகளும் 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மதியம் அஇஅதிமுக - பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜக சார்பில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல், முரளிதர ராவ், பொன். இராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டதாக இருகட்சிகளைச் சேர்ந்தவர்களும் அறிவித்தனர். தே.மு.தி.கவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீட்டித்து வருவதால், விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. பாமக, பாஜகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்ட நிலையில், அதிமுக வசம் தற்போது 28 தொகுதிகள் மீதம் உள்ளன.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|