அஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 19, 2019, 12:05 [IST] அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக, சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்தனர். ராமதாஸுக்கு பொன்னாடை போர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அன்புமணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதையடுத்து, அதிமுக-பாமக நடுவே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. கூட்டணியில் பாமகவுக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு சட்டசபையில் ஒரு உறுப்பினர்கூட இல்லாத நிலையில் அஇஅதிமுக உறுப்பினர்களைக் கொண்டு தான் ஒரு ராஜ்யசபா இடமும் நிரப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக சார்பில் 10 கோரிக்கைகள் ன்ய்ப் வைக்கப்பட்டதாகவும், அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அதிமுக - பாமக கூட்டணி உறுதியானதாகவும், பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
|
உறுபசி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 156 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 160.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே உறுபசி நாவலின் பிரதான களம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|