புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 19, 2019, 07:00 [IST] புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக யாருக்கு அதிகாரம் என்பதில் கடும் போட்டி நிலவிவருகிறது. புதுச்சேரி அரசு அனுப்பிய 39 கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி, கிரண்பேடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 13-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன் 6 நாட்களாக நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக்கு வரும் படி நாராயணசாமிக்கும், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கிரண்பேடி அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி-முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. தர்ணா போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி “39 கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பரிசிலனை செய்ய உறுதியளித்துள்ளதாகவும், அதிகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாகவும், போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும்” தெரிவித்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|