மைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 14, 2018, 07:35 [IST] கர்நாடக மாநிலம் ஹானூர் தாலுகாவிலுள்ள சுல்வாடி கிச்சுகுட்டி மாரம்மா கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் உடனடியாக உயிரிழந்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் கமகெரே, கொல்லீகல் மற்றும் மைசூருவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்தததாகவும் எனினும் பக்தர்கள் அதை பொருட்படுத்தாது உண்டதாகவும் தெரிகிறது. பிரசாதம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் உடனடியாக தென்பட ஆரம்பித்துள்ளது. பிரசாத மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள, ஹானூர் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலை புனரமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், அதில் ஒரு தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்தததும், விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவலறிந்த கர்நாடகா முதல்வர் குமாரசாமி உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|