புயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 20, 2018, 12:55 [IST] கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்று (20-11-2018) சுற்றுப் பயணம் செய்வதாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்சி, புதுக்கோட்டை, மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் பயணம் மேற்கொண்ட நிலையில் மற்ற, புயல் பாதித்த மாவட்டங்களான நாகை, திருவாரூர், மாவட்டங்களுக்கு செல்லாமல், முதலமைச்சரின் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கான உடனடி காரணம் தெரியவில்லை என்றாலும், நாகை திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், ஹெலிகாப்டரை இயக்க முடியாத காரணத்தால் முதலமைச்சர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் முதலமைச்சர் மீண்டும் திருச்சிக்கு திரும்பி மாலையில் சென்னைக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா புயலின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என ஆங்காங்கே மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது தொடர்கதையாகி உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சரின் பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|