புதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 20, 2018, 12:25 [IST] தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலின். பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (20-ந்தேதி) தமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதியில் நிலைகொள்ளக்கூடும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (20-ந்தேதி) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதுமேலும் மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர பகுதிகளில் நிலை கொள்ளக்கூடும். இது அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று (20-ந்தேதி) முதல் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். எனவே மீனவர்கள் 20,21-ந்தேதிகளில் தமிழக கடற்கரை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
|
ஆரோக்கியமே அடித்தளம்! மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2020 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 180.00 தள்ளுபடி விலை: ரூ. 165.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு’ என நம் முன்னோர் சொல்லிவைத்தனர். உடல் நலனைப் பேணிக்காத்தால் வாழ்க்கையும் இயல்பாக இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. மருத்துவமனைக்கே செல்லாத தலைமுறைகள் முன்பு இருந்தன. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் இயற்கையோடு இயைந்திருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் எப்படி இருக்கின்றனர்? மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளில் கூடும் கூட்டத்தைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். சர்க்கரை நோய் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தமிழ்ச் சமூகத்தில் இப்போது எங்கெங்கு பார்த்தாலும் சர்க்கரை நோயாளிகள்தான் உருவாகிக்கொண்டிருக்கின்றனர். நம் பாரம்பர்ய உணவுகளையும் வைத்திய முறைகளையும் மறந்ததால், மறுதலித்ததால் வந்த விளைவு இது. என்றாலும் இந்தத் தலைமுறையினரின் பார்வை நம் பாரம்பர்ய உணவுகளின் மீது திரும்பிக்கொண்டு வருவது வரவேற்கக்கூடியதாகும். இந்த நூல் அதைத் தான் வலியுறுத்துகிறது. இயற்கையான இனிப்பில் கிடைக்கும் நன்மைகள், சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவு உண்ணலாமா, மழைக்காலத்தில் கிடைக்கும் கீரைகளால் ஏற்படும் நலன்கள், குழந்தைகளுக்கான எளிய சித்த மருத்துவ முறை, கடல் உணவுப்பொருள்களால் குணமாகும் நோய்கள் என இயற்கைவழி கிடைக்கும் உணவுகளின் நன்மைகளைக் கூறுகிறது இந்த நூல். உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு இந்த நூல் அடித்தளம் இடும் என்பது நிச்சயம்! நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|