பல்சுவை இணைய இதழ்
  


இலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 14, 2018, 13:45 [IST]

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்ப்பு வலுக்கவே, நாடாளுமன்றத்தை 14-ந் தேதி கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்க வில்லை.

இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ரணில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்தனர். அந்த வழக்குகளில், தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. இதன் முடிவில் நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த உத்தரவு சிறிசேனாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று நவம்பர் 14 காலையில் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூர்ய அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது.

கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது.

இறுதியாக சபாநாயகர் ஜயசூர்ய, “குரல் வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை” என்று அறிவித்தார். அவையை நாளை காலைக்குத் தள்ளிவைப்பதாகவும் அறிவித்தார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக அணி மாறினர். இதனால் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக கூச்சல், குழப்பம் எழுப்பினர். இதனையடுத்து இலங்கை பார்லியை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

பிற செய்திகள்
மதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்
செப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
சாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு
மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு
மோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்
வழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு




இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

புத்தனாவது சுலபம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உணவு சரித்திரம் பாகம்-2
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

அன்பாசிரியர்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

புத்துமண்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

செகாவின் மீது பனி பெய்கிறது
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மக்களைக் கையாளும் திறன்
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

மூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ராஜீவ்காந்தி சாலை
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

ரப்பர்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ரஷ்ய புரட்சி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

இந்தியா ஏமாற்றப் படுகிறது
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

வரலாறு படைத்த வரலாறு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பிறந்த நாள் கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)